Can reduce weight in simple steps in Tamil
வணக்கம் உறவுகளே....
உடல் எடை என்பது ஒவொரு மனிதர்களுக்கும் மாறுபட்டது ஒவொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் நீங்கள் எப்படியான உடல் எடையை கொண்டவர் உண்மையில் உங்களுக்கு உடல் எடை அதிகம் தான் உள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள்

அதை எப்படி கண்டு பிடிப்பது / How to find perfect Weight for perfect Age.
முதலில் உங்கள் வயதுக்கு ஏயற்ற உடல் எடை உங்களுக்கு இருக்கிறதா இல்லை அதை விட அதிகம் இருக்கிறதா என்று கண்டு பிடிக்கலாம் "சரியான வயதுக்கு சரியான உடல் எடை" என்பது பொதுவாக உயரத்திற்கு ஏற்ப கணக்கிடப்படும், வயதுடன் தொடர்புடையது அல்ல. Body Mass Index (BMI) என்ற முறை இதற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆண்கள் பெண்கள் என பிரித்து கீழே கட்டுகிரேயன் பாருங்கள்...

பெண்களுக்கு – உயரம் & சராசரி எடை
- 5’ 0” (152 cm) 45 – 56 kg
- 5’ 2” (157 cm) 47 – 59 kg
- 5’ 4” (162 cm) 50 – 63 kg
- 5’ 6” (167 cm) 54 – 66 kg
- 5’ 8” (172 cm) 57 – 70 kg1
ஆண்களுக்கு – உயரம் & சராசரி எடை
- 5’ 4” (162 cm) 56 – 65 kg
- 5’ 6” (167 cm) 59 – 68 kg
- 5’ 8” (172 cm) 63 – 72 kg
- 5’ 10” (177 cm) 66 – 76 kg
- 6’ 0” (182 cm) 70 – 80 kg
இதனை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் இது சரியான எடை ஆ எண்று சரி இபொழுது பார்க்கலாம் நாம் எப்படியான வழி முறைகளை பயன்படுத்தி weght loss செய்யலாம் என்று.
- உடற்பயிற்சி (Exercise)
- ஆவது நீங்கள் செய்வது எல்லோரும் சொல்வார்கள் அதே தாங்க வேற என்ன நட கக்கிறது தான் தினமும் 30 நிமிடம் நன்றாக நடவுங்கள் நடக்கலாம், ஓடலாம் இது போன்று தினமும் 30 நிமிடம் செயுங்க.
- யோகா அல்லது பிலேட்டீஸ் – மனஅழுத்தத்தை குறைத்து உடலை active-ஆக வைத்துக்கொள்கிறது.
- மனநலம் மற்றும் பழக்கவழக்கங்கள்
- மனஅழுத்தம் குறைக்கவும் – அதிக மனஅழுத்தம் எடையை அதிகரிக்கச் செய்யும்.
- போதுமான தூக்கம் – ஒரு நாளுக்கு 7-8 மணி நேரம் தூங்கவேண்டும்.
- முறைபடுத்திய வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும் – குறிப்பாக உணவு நேரம், தூக்க நேரம்.
சரி இப்ப நாம உணவு கட்டுப்பாடு அதாவது எல்லாரும் எதிர் பார்த்த Diet Plan என்ன எண்டு பாப்பம்.
சத்துள்ள உணவுகள் சாப்பிடவும் – காய்கறிகள், பழங்கள், (whole grains), புரதச் சத்துகள் (protein-rich foods). போன்ற உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் அதிகம்.

சர்க்கரை மற்றும் வெள்ளை அரிசி குறைக்கவும் – நாம் சக்கரை மூலம் வரும் விளைவுகளை முதல் பதிவில் பார்திருந்தோம் அதுவூம் ஒரு காரணம் தான் , இது உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறிய அளவிலான உணவு – ஒரு நாளில் 3 முறைவிட 5 சிறிய உணவுகளாக எடுத்துக்கொள்வது நல்லது. அது என்ன என்று பார்க்கலாம்…
- புரதம் (Protein) நிறைந்த சிறிய உணவுகள்:
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, ஒரு ஸ்லைஸ், whole grain bread + மிளகு போட்ட முட்டை, பால் அல்லது சிறியளவு ப்ரொட்டீன் ஷேக் (sugar-free),
- நார்ச்சத்து (Fiber) நிறைந்த சிறிய உணவுகள்:
நார்ச்சத்து (Fiber) நிறைந்த சிறிய உணவுகள்: ஒரு கப் பழக்கூட்டு (banana, apple, pomegranate) , காய்கறி சாலட் + சிறிது பீன்ஸ் / பூண்டு கொட்டையுடன், நாட்டுச்சீனி இல்லாத கம்பு கூழ்
- கார்போஹைட்ரேட் (Complex carbs) சிறிய அளவில்:
கிழங்கு வகைகள் (சக்கரைவள்ளி, உருளைக்கிழங்கு) — வேகவைத்தது மட்டும், முழுமையாக வேகவைத்த ஓட்ஸ் – பழம் சேர்த்து
- சிறிய அளவில் Healthy Fat + Protein:
பீனட் பட்டர் ஸ்ப்ரெட் (சிறிய ஸ்பூன் அளவுக்கு), பிராண்ட் செய்யாத பன்னீர் துண்டுகள் (low fat paneer), தயிர் அல்லது கிரீக் யோகர்ட் + சிறிது பழம்

இவ்வாறான சத்து அதிகம் உள்ள சிறிய அளவிலான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள் இது அனாவசிய கொழுப்பு மற்றும் உடல் எடை யை குறைக்க உதவும்..
இன்றைய பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிரேன் நீங்கள் ஏயாதேனும் இது போன்ற பதிவுகள் உங்கள் சந்தேகங்களை எங்களிடம் கேயக்கலாம் நாங்கள் உங்களுக்காக ஆராய்ந்து சொல்வவோம்.
நன்றி
Some keywords for using this content mainly
Basic diet plan, weight loss plan Tamil, organic weight loss tips, weight loss food routine, diet plan